சேலம், பிப்.26: சேலத்தில் வழக்கறிஞரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் குகை ஆண்டிப்பட்டி ஏரி பகுதியை சேர்ந்தவர் தூயவன் (32). வழக்கறிஞரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (28) என்பவர் வந்தார். மதுபோதையில் இருந்த அவர் திடீரென பீர் பாட்டிலால் தூயவனின் பின்தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் தூயவனை தாக்கியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தூயவனை தாக்கிய மனோஜ்குமார் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
