×

வருவாய்த்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம், பிப்.26: சேலம் மாவட்ட மையம் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் பிரகாஷ் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை துறையின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலைகளிலும், வெளிமுகை, ஒப்பந்த, தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அனைத்து காலிப்பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை தலைவர் அர்த்தனாரி சிறப்புரையாற்றினார். இளங்கோ, மாரியப்பன், குணசேகரன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Revenue Department ,Salem ,Taluk ,Astampatti ,Federation of Revenue Department Unions ,Salem District Center ,District Coordinator ,Arul Prakash ,
× RELATED கல்லூரி பஸ் மீது மினிவேன் மோதி விபத்து