×

குரூப் 2 முதன்மை எழுத்துத்தேர்வில் 159 பேர் பங்கேற்பு

சேலம், பிப்.23: சேலத்தில் ஒரு மையத்தில் நடந்த குரூப் 2 முதன்மை எழுத்துத்தேர்வில் 159 பேர் பங்கேற்றனர். தேர்வை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, ேதர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (குரூப் II பணிகள்) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. சேலத்தை பொறுத்தவரை ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மையத்தில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை எழுத சேலம் மாவட்டத்தில் 198 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 159 தேர்வர்கள் மட்டும் கலந்துகொண்டு எழுதினர். இத்தேர்வினை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி மற்றும் ேதர்வாணைய உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது.

Tags : Group 2 Main Written Examination ,Salem ,District Collector ,Brindadevi ,Saravanakumar ,Tamil Nadu Public Service Commission ,TNPSC ,
× RELATED கல்லூரி பஸ் மீது மினிவேன் மோதி விபத்து