×

5 வயது மகளுடன் இளம்பெண் மாயம்

சேலம், பிப்.21: சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் காயத்ரி (24). இவருக்கு திருமணமாகி அருண்குமார் என்ற கணவரும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து காயத்ரி மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியே சென்ற காயத்ரி மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Shanthi ,Astampatti ,Gayathri ,Arunkumar ,
× RELATED தாயை தாக்கிய வாலிபர் மீது வழக்கு