×

கல்லூரி பஸ் மீது மினிவேன் மோதி விபத்து

கெங்கவல்லி, பிப்.26: கெங்கவல்லி-தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள இலுப்புதோப்பு வளைவு பகுதியில், நேற்று மாலை தலைவாசல் தனியார் கல்லூரி பஸ், மாணவிகளை இறக்கி விட்டு நின்று கொண்டிருந்தது. அப்போது, வலசக்கல்பட்டியில் இருந்து பாக்கு லோடு ஏற்றிக்கொண்டு ஆத்தூரை நோக்கி செல்வதற்காக வந்த மினிவேன், நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கல்லூரி பஸ்சின் முன்புற கண்ணாடி உடைந்து டிரைவர் செல்வகுமாருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று, பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தார். விபத்து ஏற்படுத்திய 2 வாகனங்களும் கெங்கவல்லி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டவுடன் மாணவிகளின் பெற்றோர்கள் சம்பவ இடத்தில் குவிந்ததால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kengavalli ,Thalaivasal ,Iluputhoppu ,Kengavalli-Dhammampatti highway ,Valasakkalpati ,Attur ,
× RELATED வக்கீலை பீர்பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது