×

ஆள்மாறாட்டத்தில் நடந்த விபரீதம்; அமெரிக்காவில் இந்தியர் கடத்தி கொலை: அனாதையாக தவிக்கும் 3 பச்சிளம் குழந்தைகள்

கலிபோர்னியா: அமெரிக்காவில் சீக்கிய முதியவர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் டிரேசி குருத்வாரா சாஹிப்பில் தன்னார்வ சமையல்காரராகவும், தச்சராகவும், எலக்ட்ரீஷியனாகவும் இந்தியாவை சேர்ந்த அவதார் சிங் (55) கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றிருந்த இவருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் மூன்று குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி குருத்வாராவிற்கு வெளியே நின்றிருந்த இவரை, மூன்று நபர்கள் வெள்ளை நிற வாகனத்தில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர். வேலை முடிந்து இரவு 9 மணிக்கு வீடு திரும்பிய இவரது மனைவி, குழந்தைகள் மட்டும் தனியாக அழுது கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கடத்தப்பட்ட அவதார் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு கடந்த 20ம் தேதி நாபா கவுண்டியில் உள்ள லேக் பெரெசா அருகே அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சான் ஜோக்வின் கவுண்டி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவதார் சிங் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான இலக்கு கிடையாது என்பது உறுதியானது. அமெரிக்காவில் சீக்கியர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : America ,California ,Avtar Singh ,Tracy ,Gurudwara ,Sahib ,California, USA ,
× RELATED உச்ச நீதிமன்றம் வரிகளை ரத்து...