×

தாய்லாந்தில் டைகர் கிங்டம் பூங்காவில் 2 வாரங்களில் 72 புலிகள் உயிரிழப்பு!!

பாங்காக்: தாய்லாந்தின் சியாங்மாய் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘டைகர் கிங்டம்’ பூங்காவில், கடந்த 2 வாரங்களில் 72 புலிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக வேகமாகப் பரவும் ‘கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தொற்றினாலேயே புலிகள் மரணித்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இச்செய்தி தாய்லாந்து சுற்றுலாத் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது குறித்துத் கருத்துத் தெரிவித்த பூங்கா பணியாளர், “புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தபோது நிலைமை கையை மீறிச் சென்றிருந்தது. பூனைகள் அல்லது நாய்களைப் போல் இல்லாமல், புலிகளின் நோய் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் கடினமானது. இதனை தொடர்ந்து, சுமார் 240க்கும் மேற்பட்ட புலிகளைக் கொண்டுள்ள இந்த பூங்கா இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன் பூங்கா முழுவதும் கிருமி நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்த புலிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் புலிகளைத் தொட்டுப் பார்ப்பதற்கும் அவற்றுடன் புகைப்படம் எடுப்பதற்கும் இந்த ‘டைகர் கிங்டம்’ பூங்கா உலகளவில் பிரபலம் என்பதால், இந்தச் செய்தி சுற்றுலாத்துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tiger Kingdom Park ,Thailand ,Bangkok ,Tiger Kingdom ,Chiang Mai, Thailand ,
× RELATED எனது தலையீடு இல்லையென்றால் இந்தியா...