×

எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலம்; 2027ம் ஆண்டில் நிலவில் நிரந்தரமாக தங்குவோம்: நாடாளுமன்றத்தில் 75 நிமிடம் டிரம்ப் உரை

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது முந்தைய ஆட்சிக் காலத்தைப் போலவே ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ என்ற கொள்கையில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட நாடுகடத்தல் சட்டத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், மெக்சிகோ எல்லைச் சுவர் பணிகளையும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கநிலையைச் சரிசெய்து, பங்குச்சந்தையை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றதோடு, வெளிநாடுகளில் இருந்த உற்பத்தி மையங்களை மீண்டும் அமெரிக்காவிற்கே கொண்டு வந்ததில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். இந்நிலையில் வாஷிங்டனில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் 75 நிமிடங்கள் உரையாற்றிய அதிபர் டிரம்ப், ‘எனது ஆட்சிகாலம் அமெரிக்காவின் பொற்காலம்’ என்றார். மேலும் 2027ம் ஆண்டில் நிலவில் அமெரிக்கர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான ‘ஆர்ட்டெமிஸ்’ திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறித்து விரிவாகப் பேசினார்.

இதற்கிடையே, குடியரசுக் கட்சித் தலைவர்கள் டிரம்பின் உரையை பாராட்டிய நிலையில், ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் இந்த உரையை ஜனநாயக விழுமியங்களின் வீழ்ச்சி என்று விமர்சித்துள்ளார். டிரம்ப் தனது உரையின் இறுதியில், ‘அமெரிக்காவின் பெருமைக்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை; நாம் நமது விதியை நோக்கிப் பயணிக்கிறோம்’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

Tags : America ,Trump ,Congress ,Washington ,President ,Donald Trump ,US Congress ,US President ,
× RELATED எனது தலையீடு இல்லையென்றால் இந்தியா...