×

மீமிசல் அரசு பெண்கள் பள்ளியில் நெகிழியை தவிர்த்து, துணி பையை பயன்படுத்த விழிப்புணர்வு

அறந்தாங்கி, பிப். 25: அறந்தாங்கி அடுத்த மீமிசல் அரசு பெண்கள் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசல் அரசு மேல் நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.

மேலும் பெற்றோர்கள், மற்றும் மாணவ, மாணவிகளிடையே, நமக்காக எங்கு சென்றாலும் 250 கிராம் எடையுள்ள கைப்பேசியை சுமந்து செல்கின்றோம். இந்த மண்ணுக்காக நாளை தலைமுறைக்காக 30 கிராம் எடையுள்ள துணிப்பையை சுமந்து கடைக்கு செல்வோம்.

துணிப்பையைப் பயன்படுத்துவோம், நெகிழியை தவிர்ப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு செய்து பலவகை மரக்கன்றுகள் வழங்கி பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழச்சியில் கலைபிரபு, மீமிசல், நாட்டாணி, புரசக்குடி கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தேஸ்வரன், பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Meemisal Government Girls' School ,Aranthangi ,Meemisal Government ,Girls' ,School ,Meemisal Government Higher Secondary School ,Avudaiyarkovil Union ,Pudukkottai District ,headmaster ,Stephen.… ,
× RELATED ராஜபாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்