×

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வறை

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக முதன்மை, மாவட்டக் கல்வி அதிகாரிகளுடன் இவர்கள் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் (செங்கல்பட்டு மாவட்டம்), தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் (திருவள்ளூர்), மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா (சென்னை) உள்பட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வறை ஒதுக்கப்பட வேண்டும். தேர்வு மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களுக்கு தேர்வறை ஒதுக்குவது, வினாத்தாள் விநியோகம், விடைத்தாள் பாதுகாப்பு ஆகியவற்றில் எந்த பிரச்னையும் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் வழங்கியுள்ளனர். மேலும், பொதுத் தேர்வு பணிகளை குறித்த காலத்தில் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தேர்வுத் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Tamil Nadu ,School Education Department ,
× RELATED விளாத்திகுளம் மாணவி வழக்கில் கைதான...