- பாக்சோ நீதிமன்றம்
- தர்ம
- முனீஸ்வரன்
- தூத்துக்குடி
- பாக்சோ நீதிமன்றம்
- தர்ம முனிஸ்வரன்
- வேத்நாட்டம் கிராமம்
- குலத்தூர், தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி : விளாத்திகுளம் மாணவி வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த 11ம் தேதி அங்குள்ள காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் நடந்தது. இந்நிலையில், காற்றாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் செயின் பறிப்பு வழக்குகள், எட்டயபுரம் அருகே கீழ ஈராலை சேர்ந்த மூதாட்டி பாப்பாவை (65) பாலியல் வன்கொடுமை செய்து உள்ளிட்ட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாப்பா கொலை செய்யப்பட்ட வழக்கில் 2024, ஆக. 6ல் தர்மமுனீஸ்வரனுக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த தர்ம முனீஸ்வரன், தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். அதுபோன்று கையெழுத்திட்டு விட்டு வரும் வழியில்தான் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவியின் உடல் இன்று பகல் 11.10 மணிக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் வேடநத்தம் சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனை இன்று தூத்துக்குடி போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை ஏப்ரல் 3-ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கு குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் POCSO சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் வாய்ப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
