×

இலங்கை தமிழ் சொந்தங்களுக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: இலங்கை தமிழ் சொந்தங்களுக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை திறந்து வைத்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தர குடியுரிமையும் பெற்றுத் தர போராடுவோம்.

* இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்,
* அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு ரூ.11.07 கோடி கல்வி உதவித்தொகை,
* சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது திராவிடமாடல் அரசு.
நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காக தொடர்ந்து ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் துறை...