×

ரூ.80 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல், பிப்.25: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமக்கல், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 2960 மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். இதில், ஆர்சிஎச் ரகம் ஒரு குவின்டால் ரூ.8330க்கும், மட்ட ரகம் குவின்டால் ரூ.5600க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.80லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Tags : Namakkal ,Namakkal Agricultural Producers Cooperative Sales Association ,Namakkal, Trichy district ,Dindigul, Erode, Govai District ,
× RELATED வையப்பமலை பாலசுப்பிரமணிய சுவாமி...