×

குஜராத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல்!!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் ரூ.10.92 கோடி மதிப்புள்ள சுமார் 1,100 கிலோ கஞ்சா, ஓபியம் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. உளவுத்துறை தகவலின்படி அதிகாலையில் நடத்திய சோதனையில் கஞ்சா, ஓபியம் தோட்டம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா தோட்டம் பெரியதாக இருந்ததால் இரவு வரை அதனை கணக்கிடும் பணிகள் தொடர்ந்தன. தோட்டம் அமைத்து கஞ்சா பயிரிட்ட போகா சவுகான், சஞ்சய் சவுகான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விவசாயம் என்ற பெயரில் சட்டவிரோதமாக கஞ்சா, ஓபியம் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : Gujarat Ahmedabad ,Bhavnagar district ,Gujarat ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை