×

13 ஆண்டுகளுக்கும் மேல் கோமாவில் இருந்தவர் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கருணை கொலை செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நபரான ஹரிஷ் ராணா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். உபி, காசியாபாத்தை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா பஞ்​சாப் பல்​கலைக்​கழகத்​தில் பி.டெக் படித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு விடு​தி​யின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்​தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.

அதிலிருந்து 13 ஆண்டுகள் உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்ட நிலையில், டியூப் மூலம் உணவும், நீரூம் அளிக்கப்பட்டு வந்துள்ளது. பல்​வேறு சிகிச்​சைகள் மேற்​கொண்​டும் நினைவு திரும்​பவில்லை. இதையடுத்து அவரை கருணைக் கொலை செய்​யக் கோரி பெற்றோர் உச்ச நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். கோமா நிலையில் உள்ள ஹரிஷ்க்கு தொடர்ச்சியான சிகிச்சைகளை அளித்தபோதிலும், அவர் குணமடைந்து, சுயநினைவை எட்ட சாத்தியக்கூறுகள் குறைவு என மருத்துவர்கள் தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஹரிஷ் ராணாவை கருணை கொலை செய்ய கடந்த 11ம் தேதி நீதிபதிகள் அனுமதி அளித்தனர். அதை தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ராணாவை கொண்டு வந்தனர். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, ராணாவுக்கு அளிக்கப்பட்டு வந்த ஊட்டச்சத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது பெற்றோர் கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

Tags : Harish Rana ,India ,Delhi AIIMS Hospital ,New Delhi ,AIIMS Hospital ,Delhi ,Ghaziabad, UP ,Punjab University ,
× RELATED படப்பிடிப்பின் போது டைரக்டர்...