டெல்லி: 8ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற சர்ச்சைக்குரிய பாடத்தை என்சிஇஆர்டி சேர்த்ததால் அதிர்ச்சி அடைந்தனர். சமூகத்தில் நீதித்துறையின் பங்கு என்ற அத்தியாயத்தில் நீதித்துறை சந்திக்கும் சவால்களும் சேர்க்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சவால்கள் என்ற தலைப்பில் நீதித்துறையில் உள்ள ஊழல் மற்றும் வழக்குகளின் தேக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 81,000 வழக்குகள், உயர் நீதிமன்றங்களில் 62 லட்சம் வழக்குகள் நிலுவை என பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
