×

பணிபுரியாத மனைவி வீட்டில் சும்மா இருப்பதாகக் கூறுவது சரியல்ல : டெல்லி ஐகோர்ட் கருத்து

டெல்லி : பணிபுரியாத மனைவி வீட்டில் சும்மா இருப்பதாகக் கூறுவது சரியல்ல என்று டெல்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. மனைவி வீட்டில் சும்மா உட்கார்ந்து இருப்பதில்லை; ஊதியம் ஈட்டும் கணவர் திறம்பட செயல்பட தன் உழைப்பை தருகிறார் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், மனைவிக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.50,000 வழங்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.

Tags : Delhi ,Aycourt ,ICourt ,
× RELATED ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை