×

ஏற்கனவே பாதுகாப்பு குறைக்கப்பட்ட நிலையில் அகிலேசுக்கு ‘கருப்புப்பூனை’ படை வாபஸ்: ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம்

ஜான்சி: சமாஜ்வாதி கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட கமாண்டோ பாதுகாப்பை ஒன்றிய அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட பாதுகாப்பு மறுஆய்வின் போது, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு அச்சுறுத்தல் குறைவாக இருப்பதாகக் கூறி அவரது என்எஸ்ஜி பாதுகாப்பு முதன்முறையாகக் குறைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயரிய பாதுகாப்பில் மீண்டும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், தனக்கு வழங்கப்பட்ட ‘கருப்புப்பூனை’ கமாண்டோ பாதுகாப்பை ஒன்றிய அரசு திடீரெனத் திரும்பப் பெற்றுள்ளதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘எனது பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதற்கான காரணங்களை ஒன்றிய அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும். ராகுல் காந்தியின் பாதுகாப்பை மாற்றியதைப் போல பாஜக அரசு எனது பாதுகாப்பு விவகாரத்திலும் அரசியல் விளையாட்டு நடத்துகிறது’ எனக் கூறினார். தற்போது அவருக்கு கமாண்டோக்களுக்குப் பதிலாக மாநில போலீசார் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Achilles ,EU ,Jhansi ,Union Government ,Samajwadi Party ,Union Ministry of Interior ,Uttar Pradesh ,
× RELATED தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி...