சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு திமுக எம்.பி., கனிமொழி காட்டமான விமர்சனம் வைத்துள்ளார். அதில், “பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு, நடவடிக்கையை எதிர்பார்ப்பது வீண்.அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அதிமுகவினருக்கு என்றும் இருந்ததில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
