7ம் வகுப்பு மாணவி கடத்தல்

தாரமங்கலம், பிப்.8: தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி கிராமம் நரசுக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வீட்டிற்கு அருகே குடிநீர் பிடிப்பதற்காக சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் தனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>