×

எங்கயும் சேராத கட்சிகள் எங்க கூட்டணிக்கு வருவாங்க: ஜி.கே.வாசன் லகலக

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டி: ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் அவரவர் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் உரிமை உள்ளது. எனவே மற்ற கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல முடியாது. இன்னும் எந்த கட்சியிலும் இணையாமல் பல கட்சிகள் உள்ளன.

இந்த கட்சிகள் அனைத்தும் எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்கள். அதற்கு அதிகவாய்ப்புள்ளது. இதனால் மேலும் பலம் பொருந்திய கூட்டணியாக இது மாறும். பிரதமர் வருகைக்கு பிறகு எங்கள் கூட்டணி மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை பிறக்கும். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். ‘எந்த கூட்டணியிலும் இணையாத கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்று அய்யா சொன்னாரே? அது எந்த கட்சியாக இருக்கும்? என்று சில லட்டர்பேடு கட்சிகளின் பெயரை நிர்வாகிகள் கூறியது கலகலப்பை ஏற்படுத்தியது.

Tags : G.K. Vasan Lakalaka ,TAMKA ,G.K. Vasan ,Rasipuram, Namakkal district ,
× RELATED கரூர் சம்பவத்தில் வன்முறையை தூண்டும்...