×

திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம்: சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது

சென்னை: திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் சென்னையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் வெளியிட்ட அறிவிப்பு: திமுக வர்த்தகர் அணி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் வரும் 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் எனது தலைமையில் நடக்கிறது.

வர்த்தகர் அணி துணைத் தலைவர்கள் கோவி.செழியன், பழஞ்சூர் கே.செல்வம், எஸ்.மோகன்-வர்த்தகர் அணி இணைச் செயலாளர்கள் என்.மாலைராஜா, வி.ஜெயன், கோவை நா.முருகவேல், பி.டி.பாண்டிச்செல்வம், எஸ்.முத்துச்செல்வி, என்.தாமரைபாரதி, எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர்-வர்த்தகர் அணி துணைச் செயலாளர்கள் ஐ.கென்னடி, டி.ஆர்.முத்துச்சாமி, எம்.எஸ். அசோக் பாண்டியன், மீஞ்சூர் கே.ஜி.பாஸ்கர்சுந்தரம்,

சிவகாசி த.வனராஜ், வி.பி.மணி, இ.ராமர், க.தனசெல்வம், பெ.சுந்தரவரதன், வே.பல்லவிராஜா, வி.எஸ்.ராமகிருஷ்ணன், பி.தர்மசெல்வன், ஆ.சத்தியமூர்த்தி, குன்னம் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி கே.வி.எஸ்.சீனிவாசன், கிருஷ்ணகிரி பி.டி.அன்பரசன், பி.டி.செல்வகுமார், ஜெ.பாலகங்காதரன் முன்னிலையில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, சட்டப்பேரவை தேர்தலில் வர்த்தகர் அணியின் கோரிக்கைகள், 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகள், ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK Traders' ,Chennai ,Kavinar Kasimuthumanikam ,
× RELATED குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை...