- எடப்பாடி
- AMMK
- அஇஅதிமுக
- பொது
- எடப்பாடி பழனிசாமி
- சிவகங்கை அரண்மனை வாயில்
- தேசிய ஜனநாயக கூட்டணி
- அதிமுக அரசு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக அரசு. 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் மகளிருக்கு வழங்கப்படும். 3 சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். தீபாவளிக்கு பட்டுப்புடவை வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு பேசினார். இந்த பிரசாரத்தின்போது, அதிமுக ஆட்சியில் கிராபைட் ஆலை ரூ.25 கோடியில் மேம்படுத்தப்பட்டதாக எடப்பாடி கூறினார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக தனியார் கிராபைட் கனிமம் எடுக்க அனுமதிக்கப்பட்டது.
எடப்பாடி பிரசாரத்தில் அமமுக வேட்பாளரை ஏற்றாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். காரைக்குடி தொகுதியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். திருப்பத்தூர், காரைக்குடி இரண்டு தொகுதிகளுக்கும் பாஜ சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வந்த பிரசார வாகனத்தில் செந்தில்நாதனை மட்டும் அருகில் நிற்க வைத்தனர். தேர்போகி பாண்டியை வாகனத்தில் ஏற்றாமல் தனியாக நிற்க வைத்தனர்.
