×

குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை ஒருவர் பாட்டிலை வீசி சண்டை கைதான 2 பேரும் தவெகவினர் என போலீஸ் விசாரணையில் அம்பலம்: மைக்கில் வீர வசனம் பேசியதாக ஆதவ் அர்ஜூனாவை நெட்டிசன்கள் கலாய்

பெரம்பூர்: தவெக கூட்டத்தின் போது, மது போதையில் அக்கட்சி வாலிபர்கள் 2 பேர் ஒருவரை ஒருவர் மதுபாட்டிலால் தாக்கி கொண்டது போலீஸ் நடத்திய விசாரணையில் அம்பலாமாகியுள்ளது. சென்னை அயனாவரத்தில் தவெக கட்சியின் வேட்பாளரான அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிமுகம் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திடீரென சிறிய பாட்டில் துண்டு ஒன்று வந்து விழுந்தது. இதில் கலைவாணி என்ற பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த ஆதவ் அர்ஜுனா திடீரென மைக்கை பிடித்து இங்கு பாட்டில் வந்து விழுந்ததற்கு தமிழக முதல்வர் தான் காரணம் எங்களை அவர் அச்சுறுத்துகிறார் என சினிமா போல் வீர வசனம் பேசினார். கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்ட சில நிமிடங்களிலேயே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அயனாவரம் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார், பாட்டில் எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தி அதிரடியாக பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது லாட்ஜில் 2 வாலிபர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டிருந்ததை பார்த்த போலீசார், 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் அயனாவரம் பொன்வேல்புரம் பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக்(19) என தெரியவந்தது. இருவரும் தவெக உறுப்பினர்கள் எனவும் தெரியவந்தது. தவெக பொதுக்கூட்டம் என்பதால் அதை லாட்ஜில் இருந்து பார்க்கும் வகையில் இருவரும் திட்டமிட்டு தங்கி இருந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது, செல்போன் முகப்பு பக்கத்தில் நடிகர் விஜய், வாளுடன் நிற்கும் புகைப்படம் வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், மதுக்கடைகள் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அப்புக்குட்டி முன்கூட்டியே மதுபானத்தை வாங்கி வைத்துக்கொண்டு அவருக்கு நன்கு அறிமுகமான ரித்திக் என்பவரை மது குடிக்க அழைத்துள்ளார். இருவரும் அதே பகுதியில் லாட்ஜில் ரூம் எடுத்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

இதில் அப்புகுட்டி அருகில் இருந்த குவாட்டர் சரக்கு பாட்டிலை தூக்கி ரித்திக் மீது வீசி உள்ளார். ரித்திக் தன் மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக நகர்ந்து உள்ளார் அந்த பாட்டில் உடைந்து ஒரு சிறு துண்டு பொதுக்கூட்டத்தில் விழுந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து நேற்று இரவு அயனாவரம் போலீசார் அப்புகுட்டி மற்றும் ரித்திக் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இதற்கிடையே தவெக கூட்டத்தில் பாட்டில் வீசியது தொடர்பாக ஆதவ் அர்ஜூனா ‘சினிமா காட்சிகள் போல் வீர வசனம் பேசிய’ வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதே நேரம் பாட்டில் வீசிய நபர்கள் தவெக உறுப்பினர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்ததும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ‘ஆதவ் அர்ஜூனாவுக்கு தேல்வி பயம் வந்துவிட்டது. இதனால் அவர் முதல்வர் கூறித்து தவறாக பேசி பொதுமக்களிடையே உணர்ச்சி வசப்பட்டு பேசுவது போல் முழக்கம் இடுகிறார் என்று கேலி கிண்டல் செய்து சமூகவலைத்தளத்தில் பலர் பதிவு செய்து வருகின்றனர். பாட்டில் வீசிய தவெகவினரை போலீசார் கைது செய்த பிறகும், இது முதல்வரின் சதி இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக ஆதவ் அர்ஜூனாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Tags : Adav Arjuna ,Perampur ,Secretary General ,Election Management Division ,Akkatsi ,Daweka Party ,Ayanavaram, Chennai ,Aadav ,
× RELATED சேவா தள பிரிவு, மகிளா காங்கிரஸ்...