×

ஈரோடு கிழக்கில் 500 சுயேச்சைகள் போட்டி?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக, நாதக, தவெக கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தொகுதியில் பிரதான அரசியல் கட்சியினர் குறிப்பிட்ட சமூகத்தின் வேட்பாளரை அறிவிக்கவில்லை என கூறி, அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் 500 பேர் சுயேச்சையாக போட்டியிட தீர்மானித்தனர். அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை முதலே நூற்றுக்கணக்கானோர் குவிந்து, வேட்பு மனுக்களை பெற்றுச்சென்றனர்.

அதிகளவில் அவர்கள் குவிந்ததால் தேர்தல் பிரிவு அலுவலர்கள், கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வேட்பு மனு படிவத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். அதன்படி கடிதம் எழுதி கொடுத்து, ஆதார் அட்டை நகல் கொடுத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து நேற்று மாலை வரை 200க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு படிவங்களை பெற்றுச்சென்றனர். இதனால் மாநகராட்சி அலுவலகம் முன் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Erode East ,Congress ,AIADMK ,NDA ,TDP ,DMK ,
× RELATED குடிபோதையில் கட்சிக்காரர்களே ஒருவரை...