சென்னை : சென்னையில் புறநகர் ரயில் சேவையில் குளறுபடி ஏதும் இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவையில் குளறுபடி, பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு, உரிய கண்காணிப்புடன் எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
