- மாம்பலம் ரயில் நிலையம்
- ரயில்வே
- சென்னை
- தெற்கு ரயில்வே
- மாம்பலம் ரயில் நிலையம்
- சோஜன்
- உஹம்பூர்
- திருச்சி
- ராம்பூர்
- குமாரி
சென்னை: 8 விரைவு ரயில்கள் தற்காலிகமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில், எழும்பூர்-குமரி செல்லும் விரைவு ரயில் எழும்பூர் – புதுவை, செங்கோட்டை, நெல்லை, மதுரை, மன்னார்குடி, சேலம் செல்லும் விரைவு ரயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 20-ந்தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் 5, 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
கடந்த 8-ந்தேதி முதல் இன்று வரையில் 10 நாட்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மறுசீரமைப்பு பணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நடைபெற இருப்பதால், நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் முழுவதுமாக எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 8 விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏப்.5 வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி, குமரி, புதுவை, செங்கோட்டை, நெல்லை, மதுரை, மன்னார்குடி, சேலம் செல்லும் விரைவு ரயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும்.
