சென்னை: சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தண்டனை பெற்ற வங்கதேச நாட்டவர் 28 பேரை சொந்த ஊர் அனுப்பி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் பனியன் நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணிபுரிந்த வங்கதேச நாட்டவர் 28 பேருக்கு விதித்த தண்டனை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 28 பேரை வங்கதேச நாட்டுக்கு 3 மாதங்களில் அனுப்பி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த திருப்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 28 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஏற்கனவே ஓராண்டாக 28 பேரும் சிறையில் உள்ளதால் 3 மாதங்களில் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
