×

சாலையில் சுற்றித்திரிந்த 20 மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் செய்யாறு நகராட்சி எச்சரிக்கை

செய்யாறு, பிப்.21: செய்யாறில் பொதுமக்களை அச்சுறுத்திய 20 மாடுகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். செய்யாறு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகளை நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், ஆணையாளர் லி.எல்.எஸ்.கீதா ஆகியோர்களின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் கே. மதனராசன் மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் சுமார் 20 மாடுகள் பிடிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தொடரும் எனவும், பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வசூலிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Cheyyar Municipality ,Cheyyar ,Municipal Council Chairman ,A. Mohannavel ,Commissioner L.L.S. Geetha ,
× RELATED சீன பெண்ணை மணந்த வந்தவாசி பொறியாளர்...