×

கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, பிப்.20: தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. அதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன் வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் வட்டக்கிளை தலைவர் முத்து தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தலைவர் ரகுபதி, மாவட்ட செயலாளர் தனசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

போளூர்: போளூர் தாலுகா அலுவலகம் அருகே வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்திற்கு, வட்டக்கிளை தலைவர் ஜோதி தலைமையில் மாவட்ட பொருளாளர் பாபு உட்பட 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: வந்தவாசி தாலுகா அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சங்க தலைவர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். தானியலட்சுமி, பாக்கியராஜ், பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட துணைத்தலைவர் அருள்ஜோதி பேசினார். இதில் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvannamalai District ,Tiruvannamalai ,Tamil Nadu Varwai Grama Employees' Association ,Taluga ,
× RELATED கிளியை பிடித்து 5 சிறுவர்கள் ரீல்ஸ்...