×

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி தண்டராம்பட்டில்

தண்டராம்பட்டு, பிப்.20: தண்டராம்பட்டில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தண்டராம்பட்டு கால்நடை மருந்தகத்தில் கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதனை கால்நடை மருத்துவர் கோவிந்தசாமி துவக்கி வைத்தார். மருத்துவர்கள் முத்துசாமி, தங்கமணி, விக்ரமன், மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கால்நடைகளை தாக்கும் நோய்கள், தீவனபராமரிப்பு, இனப்பெருக்கமுறை, கன்று வளர்ப்பு, பண்ணை பராமரிப்பு, கிடேரி கன்று சினை ஊசி மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து அனைவருக்கும் மண்புழு உரம், தாது உப்பு கலவை, தீவன சோளம் ஆகியவை வழங்கப்பட்டது. தானிப்பாடி கால்நடை மருத்துவர் முத்துசாமி நன்றி கூறினார். இந்த முகாமில் சுமார் 100 விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags : Thandarambat ,Thandarambat Veterinary Dispensary ,Veterinary Doctor ,Govindaswamy ,Muthusamy ,Thangamani ,Vikraman ,Mahendran… ,
× RELATED கிளியை பிடித்து 5 சிறுவர்கள் ரீல்ஸ்...