×

சீன பெண்ணை மணந்த வந்தவாசி பொறியாளர் இந்து முறைப்படி திருமணம் சிங்கப்பூரில் மலர்ந்த காதல்

வந்தவாசி, பிப்.21: வந்தவாசியில் சீனப்பெண்ணை இந்து முறைப்படி பொறியாளர் நேற்று திருமணம் செய்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(38). ஏழ்மை குடும்பத்தில் பிறந்த வெங்கடேஷ், ஆஸ்திரேலியாவில் பொறியாளர் படிப்பை முடித்தார். கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் எச் ஆராக வேலை செய்த சீனாவை சேர்ந்த வாங்யாயா(32) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இருவருக்கும் சிங்கப்பூரில் மேற்கத்திய முறைப்படி கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு குழந்தை இல்லையாம். இந்நிலையில் வாங்யாயா தனது கணவரின் கிராமத்தில் சொந்த வீடு கட்டி இந்து முறைப்படி திருமணம் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார். மனைவியின் ஆசைப்படி, சென்னாவரம் கிராமத்தில் வெங்கடேஷ் வீடு கட்டினார். தொடர்ந்து நேற்று உறவினர்களை அழைத்து இந்து முறைப்படி எளிய முறையில் வாங்யாயாவை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அவர்களை ெபற்றோர் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர். சீனப் பெண்ணான வாங்யாயாவின் தமிழ் மீதுள்ள பற்றை கிராம மக்கள் வியந்து பாராட்டினர்.

Tags : Vandavasi ,Singapore ,Venkatesh ,Chennavaram village ,Tiruvannamalai district ,Australia ,
× RELATED சாலையில் சுற்றித்திரிந்த 20 மாட்டின்...