×

மே.வங்க எஸ்ஐஆர் பணிக்கு நீதிபதிகள் நியமனம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: மேற்குவங்கத்தில் விரைவில் பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மேற்குவங்க அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் எஸ்ஐஆர் தொடர்பாக தொடரப்பட்டுள்ள மனுக்களை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “அரசியல் சாசன அமைப்புகள் இடையே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது. மேற்குவங்க அரசும் தேர்தல் ஆணையமும் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பான புகார்களை விசாரிக்க, தற்போதைய மற்றும் முன்னாள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை தேர்தல் பதிவு அதிகாரிகளாக நியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உத்தரவிடப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தது.

Tags : West Bengal ,Supreme Court ,New Delhi ,West Bengal government ,Election Commission ,SIR ,
× RELATED ஒரே கட்டமாக நடக்கிறது: தமிழகத்தில்...