×

லால்குடியில் குட்கா பதுக்கிய 2 பேர் கைது

லால்குடி, பிப்.20: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மால்வாய் வடக்கு தெருவை சார்ந்த சின்னசாமி மகன் மணிவேல் (45). அரியலூர் மாவட்டம் செந்துறை ராயபுரம் சின்ன ஆனந்தவாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன்(49). இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மூட்டையை பறிமுதல் செய்தனர். மேலும், இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து லால்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : Lalgudi ,Manivel ,Chinnaswamy ,Malvai North Street ,Trichy district ,Murugesan ,Chinna Anandavadi Main Road ,Senthurai Rayapuram, Ariyalur district ,Hans… ,
× RELATED பணம் பறிக்க முயன்றவர் கைது