திருச்சி, பிப்.21: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிஷோர் (27). இவர் உறையூர் சாலை ரோடு பகுதியில் பிப்.19ம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த சுலைமான் (29) என்பவரை கைது செய்தனர்.
