×

வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு

திருச்சி, பிப்.19:திருச்சியில் வாலிபரிடம் நகை, பணம் பறித்த வழக்கில் ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஏர்போர்ட் ராஜாநகர் ராயல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா(26). இவர் திருச்சி சென்னை பைபாஸ் சர்வீஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.

இந்நிலையில் பிப்.16ம் தேதி இளையராஜா அரியமங்கலம் பாலத்திற்கு கீழே நடந்து சென்றார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த அஜய் என்பவர், இளையராஜாவை தனது டூவீலரில் அரியமங்கலம் பாவலர்நகர் முட்புதர் அருகே அழைத்துச் சென்று, அவரிடம் இருந்த பணம் மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகைகளை பறித்து சென்றார்.

இதுகுறித்து புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து அரியமங்கலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி அஜய் (26), தெற்கு உக்கடை பகுதியை சேர்ந்த அசார்முகமது(26) மற்றும் அரியமங்கலம் சீனிவாசநகரைச் சேர்ந்த சண்முகபிரியன் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் ஒன்றரை பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.

 

 

Tags : Trichy ,Ilayaraja ,Trichy Airport Rajanagar Royal Park ,
× RELATED குட்கா விற்றவர் கைது