×

திருச்சியில் புகையிலை பொருள் விற்ற 2 பேர் அதிரடி கைது: 200 கிராம் பறிமுதல்

திருச்சி, பிப். 20: திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கடந்த 18ம் தேதி மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது திருச்சி கலெக்டர் அலுவலக சாலை அருகே புகையிலை பொருட்கள் விற்ற மிளகு பாறை புதுத்தெருவை சேர்ந்த மருதமுத்து (55) என்பவரை செஷன்ஸ் கோர்ட் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல தில்லைநகர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற தில்லைநகர், தூக்கு மேடை தெருவை சேர்ந்த கணேசன் (40) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : Trichy ,
× RELATED பணம் பறிக்க முயன்றவர் கைது