×

கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது

திருச்சி,பிப்.19: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி காட்டூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24) இவர் பிப்.17ம் தேதி அரியமங்கலம் காமராஜர் நகரில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பிரவீனிடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1000ஐ பறித்து சென்றார். இதுகுறித்து புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் திடீர் நகரைச் சேர்ந்த கணேசன் (24) என்பரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.250 பணம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Trichy ,Praveen ,Annanagar, Kattur, Trichy ,Kamaraj Nagar, Ariyamangalam ,Praveen… ,
× RELATED குட்கா விற்றவர் கைது