×

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் மீது குண்டாஸ்

திருப்பூர், பிப்.19: திருப்பூர் மாவட்ட இல்லத்து பிள்ளைமார் சங்கத்தினர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் சமுதாயத்தைப் பற்றி சமூக ஊடகத்தில் நாகப்பட்டினத்தை சேர்ந்த அம்பி வெங்கடேசன் என்பவர் ஜாதிப்பிரிவினையை தூண்டும் விதமாக சில குறிப்பிட்ட ஜாதிகளைப் பற்றி இழிவாகவும், கொச்சைப்படுத்தியும் சமூக ஊடகத்தில் பேசி பதிவிட்டு உள்ளார். அவர் சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரையும், அவ மரியாதையாக பேசி பதிவிட்டுள்ளார்.

இத்துடன் எங்களது சமூக பெண்களை பற்றியும் பேசியுள்ளார். அவரது வீடியோ, ஆடியோ பேச்சில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பெண்களுக்கு எதிரான சட்டம், தகவல் தொழில் நுட்ப சட்டத்திற்கும், பல சட்டங்களுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, மேற்படி அம்பி வெங்கடேசன் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தும் தகுந்த வேண்டுமாய் சமூகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்க கொள்கிறேன். சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் காக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

 

Tags : Tiruppur ,Metropolitan Police Commissioner ,Tiruppur District ,Illamma Pillaimar ,Sangam ,Ambi Venkatesan ,Nagapattinam ,
× RELATED பல்லடம் கல்லூரி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு செயல்முறை விளக்கம்