×

குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு

உடுமலை, பிப். 18: உடுமலை நகராட்சி பகுதிக்கு திருமூர்த்தி அணை மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ராமசாமி நகரில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து ராமசாமி நகர், பழனியாண்டவர் நகர், சிவசக்தி லே-அவுட், மஸ்தான் லே-அவுட், சவுதாமலர் லே-அவுட், ஜிடிவி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுமார் 900 குடியிருப்புகள் குடிநீர் வசதி பெறுகின்றன.

இந்நிலையில், ராமசாமி நகரில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. பிளாஸ்டிக் குழாய் என்பதால், கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வு காரணமாக அடிக்கடி உடைகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் கூறுகையில், “இந்த குழாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குழாய் உடைந்தால் அதனை சரி செய்ய 5 நாட்கள் ஆகிவிடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அடிக்கடி குழாய் உடைவதை தடுக்க, பிவிசி குழாய்களை அகற்றிவிட்டு இரும்பு குழாய்களை அமைக்க வேண்டும் என்றனர்.

 

Tags : Udumalai ,Thirumoorthy dam ,Ramasamy Nagar ,Palaniandavar Nagar ,Sivasakthi Layout ,Mastan… ,
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு