×

திருமூர்த்தி மலையில் மகா சிவராத்திரி கோலாகலம்

உடுமலை, பிப்.16: மகா சிவராத்திரியை முன்னிட்டு திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதில், பூலாங்கிணறில் இருந்து திருச்சப்பரம் அலங்கரித்து கொண்டு வரப்பட்டது.வழி நெடுக ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சப்பரத்துக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், நேற்று முன்தினம் சனிப்பிரதோஷம் என்பதால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவிக்கு மேல் உள்ள 5 லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 18 செட்டில்மென்ட் பகுதியில் உள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் 3 நாட்கள் திருமூர்த்திமலை கோயிலில் தங்கி வழிபாடு செய்கின்றனர். இதனால் திருமூர்த்தி மலை நேற்று களைகட்டியது.

Tags : Maha Shivaratri ,Thirumoorthy Hill ,Udumalai ,Thirumoorthy Hill Amanalingeswarar Temple ,Phulanginar ,
× RELATED 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்