×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திருப்பூர்,பிப்.16: திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக கேத்தனூரில் நேற்று சைபர் குற்றங்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காமநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ மூர்த்தி இணைய வழி குற்றங்களை தடுப்பது, மேலும் இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து எஸ்ஐ சிவந்தி பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும், போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு போலீசாரை அணுகி புகார் அளிப்பது தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தலைக்கவசம், உயிர் கவசம், படியில் பயணம், நெடியில் மரணம் எனும் தலையில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவிகள் பேரணியாக சென்று உடுமலை பேட்டை ரோட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruppur ,Tiruppur Kumaran Women's College Country Welfare Project ,Kathanur ,Kamanayakanpalayam Police ,Station ,SI ,
× RELATED 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்