×

கடற்கரை சாலையில் ஜாகிங் சென்று மும்பை மக்களின் மனதை கொள்ளையடித்த மேக்ரான்

மும்பை: டெல்லியில் நடக்கும் ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் 2 நாள் பயணமாக மும்பை வந்திருந்தார். இதனிடையே, நேற்று முன்தினம் காலை, மும்பை கடற்கரை சாலைக்கு டிஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து வந்தார் மேக்ரான். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். நடந்துசென்ற அவர் திடீரென கடற்கரை சாலையில் ஜாங்கிங் சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகே அவர் பிரான்ஸ் அதிபர் என்பதை பலரும் உணர்ந்தனர். இதனை பலரும் தனது செல்போனில் படம் பிடித்தனர். இதை பகிர்ந்து, வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் மும்பை மக்களின் மனதை மேக்ரான் கொள்ளையடித்து விட்டார்.

Tags : Macron ,Mumbai ,President ,Emmanuel Macron ,AI Impact Summit ,Delhi ,Mumbai beach road ,
× RELATED அதிகாரி தற்கொலை பஞ்சாப் முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கைது