×

ஓராண்டு பிஎட் படிப்பை கொண்டுவரும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: பிஎட் படிப்புக்கான கால அளவை மீண்டும் ஓரு ஆண்டாக குறைக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்து மூலமாக அளித்த பதிலில்,‘‘நாட்டில் ஆசிரியர் கல்வித் திட்டங்களுக்கான விதிமுறைகளையும் தர நிலைகளையும் வகுக்கும் பொறுப்புடைய சட்டரீதியான அமைப்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி தற்போதைய நிலையில், பிஎட் படிப்பின் கால அளவை மீண்டும் ஓராண்டாக குறைப்பதற்கான எந்த ஒரு முன்மொழிவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Tags : New Delhi ,Union Minister of State for Education ,Jayant Chaudhary ,Lok Sabha ,Jayant Chaudhary… ,
× RELATED அதிகாரி தற்கொலை பஞ்சாப் முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கைது