×

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் இனி வாக்குச்சீட்டு முறை: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு பயன்படுத்துவதற்கான சட்ட திருத்த மசோதா கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. கர்நாடக மாநில அரசின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சீட்டு முறை அமல்படுத்தப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்த நிலையில் இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் அரசு ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் பஞ்சாயத்துராஜ் மற்றும் ஐடிபிடி துறை அமைச்சர் பிரியாங்க் கார்கே உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக பஞ்சாயத்து ராஜ் சட்ட மசோதா திருத்தம் 2026 தாக்கல் செய்து விளக்கம் அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் , சட்ட மசோதா நகலை கிழித்து எறிந்தார். இதைத்தொடர்ந்து பாஜ உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு சீட்டு பயன்படுத்துவதற்கான சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

Tags : Karnataka ,Bengaluru ,Karnataka Legislative Assembly ,Chief Minister ,Siddaramaiah ,Karnataka state government ,
× RELATED அதிகாரி தற்கொலை பஞ்சாப் முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கைது