×

கிளியை பிடித்து 5 சிறுவர்கள் ரீல்ஸ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை, பிப். 19: திருவண்ணாமலையில் கிளியை பிடித்து ரீல்ஸ் பதிவிட்ட 5 சிறுவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள், கிளியை பிடித்து கூண்டில் அடைத்து ரிலீஸ் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை வனத்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட 5 சிறுவர்களையும் அழைத்து நேற்று மாவட்ட வன அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். அப்போது, கிளியை பிடிப்பது தவறு என தெரியாததால், ரிலீஸ் பதிவிட்டதாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, 5 பேருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர்.

Tags : Forest Department ,Tiruvannamalai ,
× RELATED பைனான்ஸ் நிறுவன மேலாளரை சரமாரி...