×

திடீரென மயங்கி விழுந்த பெண்ணின் கணவரை காப்பாற்றிய ரூ.5 ஆயிரம் மகளிர் உரிமைத்தொகை: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

வந்தவாசி, பிப். 16: தமிழக முதல்வர் வழங்கிய மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் கணவரின் உயிரை காப்பாற்றியதாக முதல்வருக்கு வந்தவாசி அருகே பெண் ஒருவர் நன்றி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவரது கணவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகள் மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கு கடந்த 13ம் தேதி காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். செய்வது அறியாமல் திகைத்த பத்மாவதி அவரது மகன்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்களிடம் கடன் கேட்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள குறுஞ்செய்தியை பார்த்த பத்மாவதி பெரும் மகிழ்ச்சி அடைந்து உடனடியாக சுப்பிரமணியை அங்கிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருகிறாராம். இந்நிலையில் தொடர் சிகிச்சைக்காக மருத்துவ காப்பீடு அட்டை பெற எம்பி எம்.எஸ்.தரணிவேந்தனிடம், பரிந்துரை பெற நேற்று வந்திருந்த பத்மாவதி, ‘எனது கணவரின் உயிரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகளிர் உரிமை தொகை ரூ.5000 தான் காப்பாற்றியது’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் பத்மாவதி நிருபர்களிடம் கூறுகையில், ‘மகளிர் விடியல் பயணம் பெண்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது போல் மகளிர் உரிமைத்தொகை அதற்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இதற்கெல்லாம் மேலாக ரூ.5000 தற்போது வழங்கியது பெண்கள் மத்தியில் பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் என பெண்கள் பேசுவதை காண முடிகிறது. உரிய நேரத்தில் எனக்கு பணம் வழங்கி உதவிய தமிழக முதல்வருக்கு நன்றி’ என்றார்.

Tags : Tamil Nadu ,Vandwasi ,Padmavati ,Marudadu ,Tiruvannamalai district ,Vandavasi ,
× RELATED இளம்பெண் திடீர் மாயம் உறவினர் வீட்டில் தங்கியிருந்த