- திமுகா
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றம்
- பொது செயலாளர்
- Duraimurugan
- சென்னை
- தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். பிப்.20 முதல் மார்ச் 2 வரை விருப்ப மனுவை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000 செலுத்த வேண்டும். விண்ணப்ப படிவத்தை ரூ.1,000 வீதம் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
