- இந்தியா
- கே. ஸ்டாலின்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை
- யூனியன் அரசு
- கே
- மானாமதுரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை: ஒரு மாநிலத்தின் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வர ஒன்றிய அரசை நினைக்க வைத்தவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் என மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது அவர் பேசியதாவது: ‘இந்தியாவிலேயே பெண்களின் வேலை வாய்ப்பு என்பது தமிழ்நாட்டில் 40 சதவீதத்தை தாண்டி உள்ளது. பெண் கல்விக்கு முக்கியத்துவத்தை தமிழ்நாடு உணருவது போல் வேறு எந்த மாநிலம் உணரவில்லை. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் 19 தோழிகள் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசும் நாடு முழுவதும் செயல்படுத்த திட்டங்களை வகுத்து வருகிறது. ஒரு மாநில அரசின் திட்டத்தை இந்தியா முழுவதுமே கொண்டு வர வேண்டும் என நினைக்க வைத்தவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தான் திராவிட மாடல் அரசு. முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுகிறதோ அதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதுமட்டுமின்றி, விடியல் பயணம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.800க்கு மேல் மிச்சப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், மகப்பேறு விடுப்பு 12 மாதங்களுக்கு ஊதியத்தோடு முதல்வர் வழங்கியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசோ வெறும் 6 மாதக்கால விடுப்பு மட்டுமே அளிக்கிறது. இதற்காக பெண்கள் நாங்கள் முதலமைச்சர்களுக்கு என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இதுமட்டுமின்றி, புதுமை பெண், அறிவை விரிவு செய், காலை உணவு திட்டம், தாயுமானவன் திட்டம், எண்ணும் எழுத்து, நான் முதல்வன் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். எனவே, மு.க.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் தொடரும். தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
