×

அரசியலில் அகரம் கூட அறியாத விஜய்க்கு ஒன்றிய பாஜ அரசு தயவில் ஒய் பாதுகாப்பு: கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கடும் தாக்கு

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் பேசியதாவது: நடிகர் விஜய் தான் கத்துக்குட்டி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். நீங்கள் எல்லாம் மற்றவர்கள் ஆரம்பித்த கட்சியில் இருக்கலாம். என்னைப்போல் தனியாக கட்சி ஆரம்பித்து ஒரு சதவீத வாக்கு வாங்கிட முடியுமா, சவால் விடுகிறேன் என்கிறார். எந்த பின்புலமும் இல்லாமல் விசிக தலைவர் திருமாவளவன் கட்சி தொடங்கி தனி அங்கீகாரம் பெற்று, 2 எம்பி, 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ளார்.

எந்த பின்புலமும் இல்லாமல் நடிகர் விஜயகாந்த் 9% வாக்கு வாங்கி, 29 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றார். உனக்காவது ஆதவ் அர்ஜூனா, மார்ட்டினின் சுரண்டல் லாட்டரி பணத்தை கொட்டுகிற பின்புலம் இருக்கிறது. அரசியலில் அகரம் கூட அறியாத உனக்கு ஒய் பாதுகாப்பு தருவதற்கு ஒன்றிய அரசு பின்பலமாக இருக்கிறது. தேர்தலுக்காக குடும்ப தலைவிகளுக்கு ரூ.5000 முதல்வர் கொடுக்கிறாராம், அதுவும் இவருக்கு பயந்து கொடுக்கிறாராம். மோடியை கூட அல்ல, நயினார் நாகேந்திரனை கூட கண்டிக்க இயலாத இவருக்கு தமிழக அரசு பயப்படுகிறதாம்.மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் 2021ல் தந்தாரே அப்போது தேர்தல் வந்ததா. விடியல் பயணம் தந்தாரே அப்போது தேர்தல் வந்ததா.

மகளிர் வைத்த 5 பவுன் ரூ.4,800 கோடிக்கு கடன் தள்ளுபடி செய்தாரே அப்போது தேர்தல் வந்ததா. சென்னை மாநகராட்சியில் இருந்த கட்டண சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டபோது தேர்தல் வந்ததா, மகளிர் சுயஉதவி குழு கடன் ரூ.2,775 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதே அப்போது தேர்தல் வந்ததா. 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் சிறப்பு திட்டமாக 60 லட்சம் குடும்பத்திற்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, 39 குடும்பத்துடன் நிறுத்தினார் எடப்பாடி. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால், தேர்தல் விதிப்படி நிறுத்தப்பட்டது. ஆனால் 2021 வரை மற்ற குடும்பங்களுக்கு கொடுக்ாமல் ஏமாற்றியிருக்கிறாரே எடப்பாடி. தேர்தலுக்காக கட்சி நடத்தாமல், மக்களுக்காக கட்சி நடத்துபவர் மு.க.ஸ்டாலின். அவரது ஆட்சியும், சாதனையும் தொடரும்.

Tags : Vijay ,BJP government ,Poet Kasimuthu Manickam ,Chennai ,DMK Traders' Union ,Kavisuth Manickam ,Virugambakkam ,
× RELATED கூட்டணி குறித்து கவலை வேண்டாம்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு